வாழ்க்கையின் பரபரப்பு எல்லோரைமே துரத்திக் கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்க, ஒன்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க, யாருக்குமே நேரமில்லை என்றாலும் சிலவற்றை நாம் ஐம் புலன்களால அனுபவக்கின்றபோது, அடடா! இதை எல்லோருமே ரசிக்கலாமே! என்று ஓர் ஆவல் உள் துாண்டலாக வெளிப்படும். சாதாரணமாக அந்தக் கணத்தில், ஒன்றை ரசித்து அனுபவித்து உடனே மறந்து விடுவதுதான் வழக்கம். ஆனால் கலைஞர்கள் தங்களை உலகத்தின் கரைத்துக்கொண்டு விடுவதால், தங்களது நேரத்தை அவர்கள் ஒதுக்கித் தம்மை தொட்ட உணர்வுகளை எவ்வகையிலாவது பிறருடன் பகிர்ந்து கொள்கின்றனர். சகலகலைகளின் வெளிப்பாடும் இந்தத் துாண்டலின் விளைவே.
சிறுவயதிலிருந்தே அருமையானவை அனைத்தையும் ரசிக்க பழகிய நான், என் ரசனையை வெளிப்படுத்த எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தேன் — இல்லையில்லை! எழுத்துக்கள் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன.
ஆசிரியையாகப் பணி புரிந்த காலத்திலேயே புதிய பாடல்கள், புதிய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என என்னிலிருந்து ஏதோதோ தாமாகவே வெளிப்பட்டன. எழுதிக் கொண்டே இருந்தேன். புதிய பூவிது பூத்தது! எனது முதல் சிறுகதைத் தொகுப்பு. அன்றைய புதுவை முதலமைச்சரான திரு.ரங்கசாமி அவர்களால் வெளியிடப்பட்டு சிறச்த வரவேற்பைப் பெற்றது. “கனடாவில் பூத்த கதை மலர்கள்”, என்னும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் மக்கள் மத்தியில் நிறைவை ஏற்படுத்தின. இந்த ஆண்டு “அன்பெனும் மலரேந்தி..” என்ற மூன்று புதினங்களைக் கொண்ட ஒருகதை நுால் தயார்!
இந்நிலையில் வாழ்வின் அனுபவங்கள் என்னை ஒரு குருவிடம் கொண்டு சேர்த்தது. அகமாற்றம் ஏற்பட்டது. புதிய பார்வை ஏற்பட்டது. குருவின் உபதேசங்கள், பொய்யான அகசேமிப்புகளை, போலித்தனங்களையெல்லாம் உடைத்தெறிந்தன. உண்மை புலப்பட்டது. முழுமையடைந்தேன். யான் பெற்ற இந்த இன்பத்தை உங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ள வழக்கம் போல் உள் உணர்வு துாண்ட, இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன்.
படியுங்கள்! அனுபவியுங்கள்! சிந்தியுங்கள்! உங்களிலும் இன்பம் பெருகட்டும்!
என்றும் நட்புடன்,
விஜயா!
gnanavijaya at gmail.com
Books:

Puthiya poovithu

Canadavil pootha kathai malargal

Anbenum malar enthi

Aga mattram thevai
Other books written based on discourses by Swami Paramatmananda Saraswathy, under his guidance and blessings:
– Ishavashya Upanishad [இஷாவச்ய உபநிஷத் (2006)]
– Katoupanishad [மரணத்துடன் ஒரு உரையாடல் (2007)]
– TatvaBodham [தத்வ போதம் (2007)]
– AtmaBodham [உயிரை நோக்கி (2008)]
Dear sir, nice work, I live in auckland, is there is any chance to read Ishavashya Upanishad [இஷாவச்ய உபநிஷத் (2006)]
– Katoupanishad [மரணத்துடன் ஒரு உரையாடல் (2007)]
– TatvaBodham [தத்வ போதம் (2007)]
– AtmaBodham [உயிரை நோக்கி (2008)]
if possible let me know, thanks
yessubbiah@gmail.com