“குருவை நாடிச் சரணடைய வேண்டும்” என்ற – அகமாற்றம் தேவை – 12

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?

எமது குருவை நாடி வந்து, அவரிடம் எங்களை நாங்கள் ஒப்படைத்து விட்ட பிறகு கனடா யோக வேதாந்த நிறுவன மாணவர்களாகிய, ஆன்மீக சாதகர்களாகிய எங்கள் அனைவருக்குமே மனதில் ஓர் அமைதி, செயல்களில் ஒரு நிதானம், வாழ்க்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு நிகழ்ச்சியாலும் பாதிப்பு அடையாத தன்மை, பேச்சில் படபடப்பு குறைந்து அமைதியாகவும் இனிமையாகவும் பேசுகின்ற தன்மை, பிறரிடம் உண்மையாகவே அன்பு செலுத்துதல் போன்ற எத்தனையோ நற்குணங்கள் தினந்தோறும் தினந்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இதைப் படிக்கின்ற வாசகர்கள் எங்களில் யாரை வேண்டுமானாலும் இது பற்றிக் கேட்டுப்பார்க்கலாம். ஏன்? எத்தனையோ பேர் எங்களின் இந்த மாற்றத்தை உணர்ந்து அது பற்றித் தங்கள் வியப்பை எங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர். பாராட்டியிருக்கின்றனர். நானும் அப்படி மாறவேண்டுமே! என்று ஆசைப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றம் உனக்கு எப்படி ஏற்பட்டது? என்று வினா எழுப்பியிருக்கின்றனர். ஆனால் இதே அமைதியையும், தன் உணர்வையும் பெறுவதற்கான முயற்சியை உங்களில் எத்தனைபேர் மேற்கொள்ள முன்வந்திருக்கிறீர்கள்? ஆன்மீகம் என்றால் என்ன? என்பதை அறிய எத்தனைபேர் ஆசைப்பட்டிருக்கிறீர்கள்? நம் கண் முன்னே வாழ்கின்ற மனிதர்களில் நுhற்றுக்குத் தொண்ணுhறு பேர் மிக மிக இயந்திரத்தனமாகத், தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம், என்ன சிந்திக்கிறோம் போன்ற உணர்வேயின்றி எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் குரு அடிக்கடி எங்களை ஒரு கேள்வி கேட்பார். நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்களா? என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்வி எங்களுக்கெல்லாம் புதுமையாக இருக்கும். குழப்பத்தைத் தரும். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நாங்கள் திருதிருவென்று விழிப்போம்;. அதைப் பார்த்தவுடன் அவருக்குச் சிரிப்பு வரும்;. ஏனெனில் வெறுமனே சாப்பிடுவதையும், பேசுவதையும், வேலை செய்வதையும், துhங்குவதையும் தான் வாழ்க்கை என நாம் நினைத்து செய்து கொண்டிருக்கிறோம். ஓரு டீயைக் கூட நீங்கள் முழுமையாகக் குடித்ததில்லை! என்பதே எங்கள் குருவின் வாதம். ஆமாம்! என்பதுதான் இதற்குப் பதில் என்பது உங்களுக்குத் தெரியுமா? கப், கப்பாக எத்தனையோ நுhறு தடவைகள் நாம் டீ குடித்திருக்கிறோமே! ஆனால் ஒரு கப் கூட முழமையாக நீங்கள் ஒரு டீயைக் குடித்ததில்லை என்றால் அதற்கு ஆமாம் என்பது தான் பதில் என்று இவர் சொல்கிறாரே! என்று உங்களுக்குத் திகைப்பாக இருக்கும்.

12நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். ஓரு கப் டீயை எடுத்து வாயில் வைப்பதுதான் தெரிகிறது. அடுத்த நிமிடம் மனம் ஏதேதோ எண்ணங்களில் உலா போகத் துவங்கி விடுகின்றது. ஓரு எண்ணம் என்றல்ல: ஓராயிரம் எண்ணங்கள்! எதையோ யோசித்து, எதை முடிக்கவோ திட்டமிட்டு, எதை நினைத்தோ வருத்தப்பட்டு அல்லது மகிழ்ந்து, அந்த நினைவில் மூழ்கிவிட்ட நிவையில் டீ என்ற அந்தத் திரவம் வாய் வழியே வயிற்றுக்குள் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் போய்ச் சேர்ந்துவிடுகிறது. சிலபேர் “நான் காலையில் டீ குடித்தேனா?” என்று கேட்பது கூட நமக்குத் தெரியும். அப்படி நமக்கு அந்த டீயைக் குடித்தது கூட மறந்துவிடும்.

ஓரு ஜென் துறவி இருந்தார். அவர் ஒரு சின்ன கப்பில் இருந்த டீயைத் தன் இரு கைகளிலும் பக்குவமாக ஏந்திக்கொண்டு, ஏ! இறைiவா! இப்படி ஒரு அருமையான டீயை நான் சுவைப்பதற்குத் தந்தாயே! உனக்கு எப்படி நன்றி சொல்வேன்! எப்படிப்பட்ட ஓர் இனிய அனுபவம்! என்று ஆடி ஆடி, சொட்டு சொட்டாக அந்த டீயை ரசித்து ருசித்து அப்படியே அந்த டீயை அனுபவிக்கும் ஆனந்தத்தில் மூழ்கிவிடுவார். இதைத்தான், இப்படி அனுபவிக்கின்ற சுகத்தைத் தான் நாம் பெற்றிருக்கிறோமோ என்று யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் நான் சொல்ல வருவது என்ன என்பது புரியும்.

கடுமையான கோடையில் ஒரு குளிர்ந்த தென்றல் நம்மை இதமாக வருடிச் செல்லுகின்ற சுகம் மட்டும் இந்த இனிமையயைத் தரக்கூடாது. காலில் முள் குத்திச் சுரீரென்று வலிக்கின்ற சமயத்திலும், எதிர்பாராத நேரத்தில் முழங்கையில் பலமாக இடித்துக்கொள்ள நேர்ந்தாலும் அந்த வலி கூட இந்த இனிய அனுபவமாக ஒருவருக்குத் தெரிய வேண்டும். அதாவது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தண்ணீரை மொண்டு உடலில் ஊற்றி அதன் குளிர்ச்சி அப்;படியே உடல் முழுவதும்; பரவுகின்ற சுகத்தை அந்த கணத்தில் அனுபவிக்காமல், அந்த நேரத்தில், இன்று மாலை செல்லவிருக்கும்;; விருந்திற்கு என்ன உடையை அணிந்துகொள்ளலாம், என்று சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தக் குளியலின் சுகத்தை அனுபவிக்க முடியுமா?

இப்படி நம் வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அனுபவிக்கத் தெரிந்து கொண்டால் அந்த கணத்தில் தோய்ந்து போய் விட நாம் கற்றுக்கொண்டால், அதனை ரசிக்கத் தெரிந்துகொண்டால் அது தான் வாழ்தல் என்பது. அந்தக் கணத்தில் அதில் முழமையாக ஒன்றியிருப்பது ஓருவர் கடுஞ்சொற்களால் நம்மை அர்ச்சித்தபோதும் அதையும் ரசிக்கக் கற்க வேண்டும். நம் கண் முன் நமக்கு மிக விருப்பமான ஒருவர் இறக்க நேரிடும்போது கூட கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை விட, அப்போது நம் உள்ளத்தில் பீறிடும் உணர்ச்சியை அப்படியே நாம் நமக்குள் உற்றுப் பார்த்து அதை, அந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும். இப்படி நம்மை நாமே கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று அனுபவிக்கத் துவங்கிவிட்டால், வெளி உலகப் பிடிப்பும், அது சம்பந்தமான தொடர் சிந்தனைகளும் தாமாகவே சிறிது சிறிதாக நம்மை விட்டு விலக ஆரம்பித்துவிடும். அந்த நேரத்திற்குரிய செயலில் மட்டும் அப்படியே ஈடுபடுவதால், செய்கின்ற செயலைச் செம்மையாகச் செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது அச்செயலும் முழமையானதாக அமைந்து பிறரது பாராட்டையும்; பெற்றுத் தரும். விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட்டு அதன் மூலம் பகை உணர்ச்சி இல்லாமல் நீங்கும். பகை உணர்வு போய்விட்டால் பிறகென்ன? மீதி இருப்பது அன்பு மட்டுமே. ஆஅ;த அன்பை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

இதைத்தான், இந்தத் தன்னோடு தான் இருக்கும் பழக்கத்தைத் தான்,எங்கள் குரு எமக்குத் தமது உபதேசத்தினால், கண்டிப்பான வழி காட்டுதலினால் கற்றுத் தந்தார். சிறு பயிரைப் பார்த்துப் பார்த்துத்; தோட்டக்காரன் வளர்ப்பதைப்போலப் பக்குவமாக எங்களைப் செப்பனிட்டு சீர் செய்தார்.

மந்திரவாதி, சூ மந்திரக்காளி! என்றதும், கண்முன் அற்புதங்கள் நிகழ்வதுபோல ஒருவரிடத்தில் அக மாற்றம் உடனே நடந்துவிடக்கூடியதல்ல. மெது மெதுவாக ஒரு மொட்டு, மலராக இதழ் வளர்வதுபோல எந்தக் கணத்தில் என்பது தெரியாமல் நிகழக்கூடிய ஒரு நீண்ட நெடிய நிகழ்வு இது. பிரம்மம் தொலைவில் இருக்கிறது: அது மிக மிக அருகிலும் இருக்கிறது. அது நானாகவே என்னுள் இருக்கிறது! என்று ஈசாவாஸ்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, குருவின் அயரா முயற்சியின் காரணமாக ஒருவனுக்கு அறியாமை விலகி, அறிவு ஒளி விடும் பொழுது இந்த இனிய அனுபவம் தானாகவே தன்னுள் நிகழும். வேகு தொலைவில் இருப்பதாகத் தெரிந்த அமைதி நமக்குள்ளேயே இருப்பது தெரியும். இது குருவின் கடும் உழைப்பினால் மட்டுமே, அவரை அனுகினால் மட்டுமே ஏற்படக்கூடுமே யன்றி, நமக்குள் தானாக நிகழக்கூடிய ஒன்றல்ல. இதைத்தான் ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆன்மீகம் என்பது ஒன்றுமே இல்லை. அதற்காகத் தனியாக கடும் பயிற்சியும் எதுவும் தேவையில்லை. சற்குருவைத் தேடிச் சரணடைந்து விட்டால் போதும். மற்றவற்றை அவர் பார்த்துக்கொண்டு விடுவார். ஏனெனில் அவரின் தியாகமே அதுதான். “மேலான சிஷ்யர்களைப் பிரம்மம் எனக்கு இடையறாது வாங்கிக்கொண்டே இருக்கட்டும்!”; என்பது தான் ஒரு குருவின் தினசரிப் பிரார்த்தனையாக இருக்கின்றது. தனது சீடனின் கர்மப்பதிவுகளை அழித்து ஞானவேள்வியில் போடுகின்ற சமித்துகளாக அவனது அறியாமையைக் கொண்டு தனது உபதேசமென்னும் நெய்யை அந்த ஞானத் தீயில் ஊற்றுவதன் மூலம் சீடனின் அறிவை ஒளி வீசச் செய்யும் அரும்பணியைத்தான் ஒரு குரு தன் முழு நேரப் பணியாகச் செய்துகொண்டிருக்கிறார். சீடனின் பரிணாம வளர்ச்சிக்காக அவர் தன் வாழ்க்கையே சமர்ப்பிக்கின்றார். தமது தியான நிலையில் அவனை அவர் துhய்மைப் படுத்துகின்றார். இப்படிப்பட்ட குருவிடம் எங்களை நாங்கள் பரிபூரணமாகக் கையளித்தோம். சரணடைந்தோம். இப்போது அமைதியாக வருவதை ஏற்று, வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்கின்றோம். இப்போது புரிந்ததா, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று. இனியும் புரியாததுபோல் புற உலகை இன்பங்களை நிலையானது என எண்ணித் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தால் எவ்விதப் பயனுமில்லை. சொல்லத் தெரிந்த பிறகாவது இந்த அக மாற்றத்தை உங்களில் ஏற்படுத்த நீங்கள் முற்பட்டால், அதற்கு எங்கள் ; கனடா யோக வேதாந்த நிறுவனம் ; உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. அங்கும் இங்கும் ஆன்மீகத்தைத் தேடி அலைந்து திரியாமல் சற்குருவின் துணையை நாடி அவரது உபதேச உரைகளை இடைவிடாமல் கேளுங்கள். கேட்டவற்றைப் பற்றி நன்றாகச் சிந்தியுங்கள். அப்படிச் சிந்தித்து ஏற்றுக்கொண்ட சரியான கருத்துக்களை உங்கள் மனதில் பதிய வையுங்கள். அப்படிப் பதிய வைத்த உண்மைகளை மற்றவர்களோடு; இதமாகக் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் அந்தப் பாதையைக் காட்டுங்கள்;! “குருவை நாடிச் சென்று பயன் பெற வேண்டும்!”என்ற அகமாற்றம் உங்களுக்குள் ஏற்படட்டும்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s