குருவைத் தேடி – 30

அப்போது திரிவிக்ரம பாரதி குருவிடம், ‘ஸ்வாமி! சில சமயம் எதிர்பாராத விதத்தில் சில பாவங்களைச் செய்யும்படி நேர்ந்து விடுகிறது. அப்படித் தவறிச் செய்துவிட்டாலோ அல்லது அறியாமல் செய்து விட்டாலோ அதற்கு என்ன பரிகாரம்? என்று வினவினார். குருதேவர், அவரிடம், ‘பாவங்களுக்குப் பரிகாரங்கள் உண்டு. ஒருவன் தான் செய்த பாவத்தை உணர்ந்து உண்மையாகவே மனம் வருந்தினால் அந்தப் பாவம் போய்விடும். மேலும் துக்கப்பட்டு உரியமுறைப்படி சில பரிகாரங்களைப் பெரியவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டு அதைச் சரியாகச் செய்தால் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்!” என்றார். மேலும் அவர் தற்போது நடைமுறையில் இல்லாத, அந்தக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பலவிதமான கடுமையான பிராயச்சித்தங்கள் பற்றி எடுத்துக் கூறினார். அதன்பின் குரு அந்த வழிப்போக்கனைப் பார்த்து, ‘அவன் முன் ஜன்மத்தில் பிராமணனாக இருந்து, மாதா பிதா, குரு முதலியவர்களைத் துhற்றிப் பேசியதால் தான் இப்படி சண்டாள ஜன்மத்தில் பிறந்ததாகவும், அங்குள்ள சங்கமத்தில் தொடர்ந்து ஓரு மாத காலம் ஸ்நானம் செய்து வழிபட்டால் மறுபடியும் ஜன்மம் பெறலாம்என்று சொன்னார்.

அந்த மனிதன் குருவிடம், ‘தங்களின் அனுக்கிரகத்தால் நான் புனிதமாகிவிட்டேன். நான் இப்போது வேதம் படித்த பிராமணனாக உரு மாறிவிட்டேன். ஆகவே என்னையும் மற்ற பிராமணர்களுடன் நீங்கள் சேர்க்க அருளாசிகளை வழங்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

இதைக் கேட்டு குரு சிரித்து, ‘உன் உடல் சண்டாள வம்சத்தில் பிறந்திருக்கும்போது உன்னை எப்படி பிராமணனாக ஏற்க முடியும்? அது நியதிக்கு ஒவ்வாதது. இயற்கையின் விதிப்படியே நடக்க வேண்டும். மேலும் இந்தக் கதையைக் கேள்! முன் காலத்தில் விசுவாமித்திரர் என்னும் சத்திரிய அரசன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, தான் இனி பிராமணன் என்று சொல்ல ஆரம்பித்தார். இந்திராதி தேவர்களிடம் தமது தீவிர தவத்தை ஏற்றுத் தன்னைப் பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று எனக் கேட்டுக்கொண்டார். தேவர்கள் அவரது வேண்டுகோளை ஏற்கவில்லை. பரமகுருவான வசிஷ்டர் அவரைப் பிரம்மரிஷி என்று ஒப்புக்கொண்டால், அதன்பின் தாங்களும் ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டனர். விசுவாமித்திரர் வசிஷ்டரிடம் சென்று தான் அனேக ஆயிரம் வருடங்கள் தீவிரமான தவம் செய்ததால் தன்னை விப்ரன் எனப்படும் பிராமணனாக அழைக்க வேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு வசிஷ்டர் சத்திரியர்கள் தவத்திற்கு அருகதையுடையவர்கள் அல்ல. அவர்கள் ஒருக்காலும் பிராமணர்கள் ஆகமாட்டார்கள். இந்த சத்திரிய குலத்தில் பிறந்து, உடலை விட்டு நீங்கி மறுபடியும் பிராமண குலத்தில் பிறந்து, உபநயனம் ஆகிக் காயத்ரி மந்திரம் உபதேசமான பிறகு தான், அவர் பிரம்ம ரிஷி ஆவார் என்றும் சொல்லி மறுத்து விட்டார்.

இதனால் விசுவாமித்திரர் கோபமடைந்து வசிட்டரின் நுhறு புதல்வர்களையும் அழிக்க ஆரம்பித்தார். ஆசிரமத்தை அழித்தார். அவர் என்ன செய்தும் வசிஷ்ட்டர் விசுவாமித்திரரை பிரம்மரிஷி என்று அழைக்கவே இல்லை. கோபம் தாங்காமல் ஒரு பெரிய பாறாங்கல்லை வசிஷ்டர் தலையில் போட விசுவாமித்திரர் அருகில் வந்தார். வசிட்டர் கலங்கவில்லை.

அதைப் பார்த்த விசுவாமித்திரர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதாவது இவரை நான் கொன்றுவிட்டால், பிறகு யார் எனக்குப் பிரம்மரிஷி என்ற பட்டத்தைத் தருவார்கள்? இந்திரன் முதலான தேவர்களெல்லாம் வசிஷ்டர் சொன்னால்தானே கேட்பார்கள். இப்படிப்பட்ட ஒரு மகரிஷியைக் கொன்றால் நமக்குப் பாபமும் பெரிய தோஷமும் வந்து சேருமே! என்றெல்லாம் யோசித்துப் பாறாங்கல்லை எறிந்துவிட்டு மிகவும் மனம் வருந்தித் தலை குனிந்தார். தம் பிழை அவருக்குப் புரிந்தது. சத்திரியனின் போர்க்குணம் தம்மில் இருக்கும்வரை என்ன தவம் செய்து என்ன பயன்? சத்வகுணம் ஏற்படவில்லையே என வருந்தினார்.

அவரது மனஓட்டத்தையும் அவர் உண்மையை உணர்ந்தததையும் அறிந்துகொண்ட வசிஷ்டர், பிரம்மரிஷியே! என அவரை அழைத்தார். விசுவாமித்திரர் அதனை ஏற்க மறுத்துத் தன் தேகத்தைச் சூரிய கிரணங்களினால் எரித்துச் சாம்பலாக்கிப் புதிய தேகத்தைப் பெற்றார். அதன்பின் விசுவாமித்திரர் பிரம்மரிஷியாக மூவுலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அதேபோல நீயும் உன் பிறப்பைப் பற்றி உணர்ந்து மனம் வருந்தி இந்த தேகத்தை விட்டுப் பிராமணனாகப் பிறந்தால் அதன்பின் உன்னைப் பிராமணர்களுடன் சேர்க்க முடியும் என்றார் ஸத்குரு ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி. தரித்திரன் புதையலைக் கண்டால் எப்படி அதை விட மாட்டானோ, நோயாளி அமிர்தத்தைப் பெற்றால் எப்படி தன் உயிரை விட மாட்டானோ, காய்ந்த மாடு வைக்கோலைக் கண்டால் எப்படி விடாதோ, அதேபோல அந்தச் சண்டாளனும் தன் பழைய மனநிலைக்கு மாறித் தன் வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு மனமில்லாதவனாய், குரு என்ன சொல்லியும் கேட்காமல் திரும்பத் திரும்பத் தன்னைப் பிராமணனாக அங்கீகரிக்கும்படி வேண்டினான். அந்த நேரத்தில் அவனது மனைவியும் குழந்தைகளும் அங்கு வந்து அவனைத் தங்களுடன் வீட்டிற்குத் திரும்பும்படி வற்புறுத்தி அழைத்தனர். அவனோ அவர்கள் தன்னைத் தொடக்கூடாது என்று சொல்லி விரட்டி அடித்தான். என்ன செய்வது என்று தெரியாத அவனது குடும்பத்தினர் குருவின் காலடியில் வந்து விழுந்து வணங்கி எப்படியாவது அவனைத் தங்களுடன் அனுப்பும்படி அழுது வேண்டினர். அவனில்லாவிட்டால் தங்களை கவனித்து ஆதரிக்க யாருமில்லை யென்றும், தாங்கள் உயிரைவிட வேண்டியதுதான் என்றும் புலம்பினர்.

குரு அந்த மனிதனைக் கூப்பிட்டு அவனுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகும்படியும், மனைவியை அக்னி, சூரியன், பூமி சாட்சியாக மணம் செய்து கொண்டதால் குடும்பத்தை விரட்டக்கூடாது என்றும் மனைவி குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களைக் காப்பாற்றுவது அவன் கடமை என்றும் அறிவுரை கூறினார்.

ஆனால் அவனோ, ‘எனக்கு வேதம், சாஸ்திரம் முதலியவற்றில் ஞானம் ஏற்பட்டுவிட்டதே! இனி எப்படி அந்த ஈனஜாதியில் சென்று திரும்பவும் நான் இருக்க முடியும்? நீங்கள் எப்படி என்னைப் போகச் சொல்லலாம்?’ என்று கேட்டான்.

குரு உடனே இவன் ஏன் இப்படிப் பேசுகிறான் என்று மனதிற்குள் நினைத்து ஞானதிருஷ்டியால் பார்க்க அப்போது, தான் அவன் உடம்பில் விபூதியைத் துhவியது தெரிந்தது. அந்;த விபூதியால் தான் இப்படிப் பேசுகிறான் என்று அறிந்து ஒருவனைக் கூப்பிட்டு ஒரு குடம் நீரைக் கொண்டு வந்து அவன் தலையில் கொட்டும்படி சொன்னார்.

week30குருவின் ஆணைப்படி நீரைத் தலையில் ஊற்றவே விபூதி கரைந்து போய்விட்டது. உடனே அவன் தன் மனைவி குழந்தைகளிடம் சென்று கட்டித் தழுவி, நான் ஏன் இங்கு வந்தேன்? என்ன நடந்தது?”என்று அவர்களிடம் கேட்டான். அவர்கள் ஏதோ சமாதானம் சொல்லி அவனைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

நடந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் நம்ப இயலாத வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சகலஜனங்களும் விக்கிரமபாரதி முனிவரும் மிக்க ஆச்சர்யமடைந்தனர். முனிவர் குருநாதனிடம் மிகுந்த பக்தியுடன் குருவே! ஒரு பதீதனுக்கு எப்படி அவ்வளவு ஞானம் ஏற்பட்டது? அவனைக் குளிப்பாட்டியவுடன் எப்படி அது மறைந்து போயிற்று? என்று கேட்டார்.

அதற்கு குருதேவர், அவனது உடம்பின் மீது விபூதி இருந்தவரையில் பூர்வ ஞானம் ஏற்பட்டது. நீரில் விபூதி கரைந்து போனதும் ஞானமும் மறைந்து விட்டது. விபூதி மகிமை மிக அபாரமானது என்று சொன்னார். முனிவர் குருவின் பாதங்களில் வணங்கி விபூதி மகிமையைத் தமக்குச் சொல்லும்படி வேண்டினார்.

விபூதியின் சிறப்பு

முனிவர் விக்கிரம பாரதியின் வேண்டுகோளை ஏற்று குரு நரஸிம்ம ஸரஸ்வதி விபூதியின் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தார் என்று அபூர்வ சித்தர் நாமதாரகனிடம் கூறினார். அவனும் ஆர்வமுடன் கேட்க அந்த வரலாற்றை சித்தர் அவனுக்குச் சொன்னார்.

கிருத யுகத்தில் வாமதேவர் என்னும் முனிவர் காமக் குரோதங்களை ஒழித்து, வீடு வாசலைத் துறந்து காடு மேடுகளில் அலைந்து திரிந்தார். அவர் ஒரு பிரம்ம ஞானி. ஜடையுடன், மரவுரியையும், புலித்தோலையும் ஆடையாக அணிந்தும், தலை முதல் கால் வரை விபூதியை அணிந்தும், அவர் மிக்க வைராக்கியத்துடன் மௌனமாக அனேக இடங்களைத் தரிசித்துக்கொண்டு, கிரௌஞ்ச ஆரண்யம் என்ற காட்டை அடைந்தார்.

அந்தக் காட்டில் ஒரு பயங்கரமான பிரம்மராட்சதன் வருகிறவர்களை எல்லாம் அடித்துக் கொன்று புசித்து வாழ்ந்து வந்தான். அவன் முனிவரைக் காட்டில் கண்டதும், அவரைக் கொல்வதற்காகப் பற்களைக் கடித்துக்கொண்டு அருகில் நெருங்கினான். அவன் அப்படி வருவதைக் கண்ட வாமதேவர், கவலையற்றவராய் அப்படியே நின்று விட்டார். அந்த ராட்சதன் அவரைக் கட்டிப்பிடித்து அவருடலை நெருக்கிக் கொல்ல நினைத்தான். அப்படி அவன் அவரைக் கட்டிப்பிடித்துத் தழுவியபோது, அவர் பூசியிருந்த விபூதி அவனுடலில் பட்டது. அடுத்த நொடி அவனது ஜன்மாந்திரத்தில் செய்த பாவங்களெல்லாம் பஸ்பமாகிவிட்டன. அவன் ஞானியாக மாறிவிட்டான்.

மானஸரோவரம் என்ற ஏரியில் விழுந்த காக்கை ராஜ அன்னமாக மாறுவதைப் போலவும், அமிர்தத்தைக் குடித்த பாமரன் தெய்வீகத் தன்மையைப் பெறுவதைப் போலவும், ஜம்புநாதம் என்ற நதியிலிட்ட மண் பொன்னாக மாறுவதைப் போலவும், விபூதி தன்மீது பட்டதனால் அந்தப் பாவி புனிதன் ஆனான். வாமதேவருடைய உடம்பைத் தழுவியதால் சகல பாபங்களிலிருந்தும் விடுதலை அடைந்தான்.

யானைகளையும், குதிரைகளையும், மனிதர்களையும் புசித்து சமுத்திரத்தின் நீரை அப்படியே குடித்தும் பசி, தாகம் அடங்காத அந்த அரக்கனுக்குப் பசி என்பதே மறந்துபோய் ஞானியாகி மாறி, முனிவரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கித் துதித்தான்.

‘குரு சிரோமணியே! என்னைக் காப்பாற்றும்! காப்பாற்றும்! நீங்கள் சாட்சாத் ஈஸ்வரன். நான் மிகப் பெரிய பாவக்கடலில் மூழ்கிக் கிடந்தேன். கருணைக் கடலான தாங்கள் தான் என்னைக் கரையேற்ற வேண்டும். தங்களது தரிசனத்தால் என் பாவங்களெல்லாம் தொலைந்தன. இந்தப் பாவியை ஒரு பக்தனாக ஏற்றுக் காத்தருள வேண்டும்!” என்று வேண்டினான்.

இதைக்கேட்டு அந்த முனிவர், அவன் யார் என்றும், இப்படிப்பட்ட காட்டில் அவன் வசிக்கக் காரணம் என்ன என்றும் வினவ, அவன் தன் கரங்களைக் கூப்பி வாமதேவரை வணங்கி ‘தங்களுடைய தொடுதலால் எனக்குப் பூரண ஞானம் ஏற்பட்டுவிட்டது. எனது இந்த கதிக்குக் காரணமான என் ஜன்ம வரலாறுகள் நினைவுக்கு வருகின்றன” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s