குருவைத் தேடி – 29

குரு சரித்திரத்தின் இந்த அத்தியாயத்தில் எவை எவையெல்லாம் பாவங்களாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய ஒரு விவரமான பட்டியல் சித்தரின் வாயால் வெளிவந்திருக்கின்றது. நம் முன்னோர் நமக்குச் சொல்லித்தந்த அறவுரைகளின், பழக்க வழக்கங்களின் அடிப்படையில் தான் பெரும்பாலான குடும்பங்கள் அவற்றைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் சின்ன வயதிலிருந்தே இதைச் செய், அதைச் செய்யாதே. இதைச் செய்தால் புண்ணியம். அதைச் செய்தால் பாவம் என்று ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அர்த்தத்தைக் கொடுத்து, அதைப் புரிந்துகொண்டு வாழச் செய்தார்கள். குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்பவற்றை இளையவர்கள் “மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்” என்று எதிர்க்கேள்வி எதுவும் கேட்காமல் அப்படியே கேட்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

அன்றாட வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு ஏற்றவாறு நன்னெறி, மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற பழைய பாடல்கள் எல்லாம் நல்லவை தீயவை எவையென எடுத்துரைத்து வழி காட்டின. ஏதேனும் ஒரு குறளைத் திடமாகப் புரிந்துகொண்டு அதைக் கடைப்பிடித்தாலே போதும், உயர் வாழ்வு வாழ்ந்து விடலாம். இப்படிப்பட்ட அடித்தளம் போடப்பட்டதாக அமைந்திருப்பதால் தான், நமது இந்து மதம் இன்று வரை மங்காச் சிறப்புடன் பொலிவுற்றுத் திகழ்கின்றது.

இவ்வளவு விவரமும் எதற்கென்றால், இந்த நுhலில் இவ்வத்தியாயத்தில் பாவங்களின் பட்டியலும், அதற்கேற்பத்தான் ஒருவனின் பிறவி அமையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அப்பட்டியலில் பல பாவங்கள் மிகக் கடுமையாகவும், நடைமுறையில் இல்லாததாகவும், சொல்லத் தகாதவையாகவும் கூட இருக்கின்றன. எனவே தான் என்ன இப்படியெல்லாம் எழுதி இருக்கிறாளே என்று பிழையாகச் சிந்திக்காமல் அந்தக் காலத்தில் இவையெல்லாம் கூட வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன் அவர்கள் அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ்ந்தனர் என்ற உண்மையைத் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அளவில் உங்களைத் தயார் செய்துவிட்டுப் பிறகு இந்தப் பகுதியை நான் எழுதத் துவங்குகின்றேன்.

கர்வம் பிடித்து வாதத்திற்கு அலைந்து திரிந்த அந்த இரண்டு பிராமணர்களின் அகம்பாவத்தை அடக்குவதற்காகக் குரு நரசிம்ம ஸரஸ்வதி வழிப்போக்கனான ஒரு புலையனை அழைத்து வரச்செய்து, தமது மகிமையால் அவனை ஏழு பிறவிகளைக் கடக்கச் செய்து பிராமணன் ஆக்கி வேதம் கூற வைத்தார் அல்லவா?

இந்த அதிசயத்தால் அரண்டு போன அந்த கர்விகள் குருவிடம் சாபம் பெற்றுப் பிரம்மராட்சதர்களாக மாறி விட்டனர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் அந்த வழிப்போக்கனான புலையன், குருவிடம், ‘பிராமணனான நான் இப்படிப் புலையனாக ஜன்மம் எடுக்க அப்படி என்ன பாவம் செய்தேன்? தாங்களோ திரிகால ஞானியல்லவா? ஆகவே அருள்கூர்ந்து எனக்கு இதன் காரணத்தை விளக்க வேண்டும்! என்று பணிவுடன் கேட்டான்.

சத்குரு அவனை நோக்கி, மிகவும் விபரமாகச் சில விளக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அதனை அங்கு கூடியிருந்த அனைவரும் மிகுந்த சிரத்தையுடன் கேட்டனர்.

‘அவரவர் செய்த புண்ணிய பாவங்களை அவரவரே தான் அனுபவித்துத் தீர்க்க வேண்டும் என நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். எனவே தான் அவரவர் கர்ம வினைப்படி மிகச் சிறந்தவர்களாகவும், நீசர்களாகவும் ஜன்மம் எடுக்கின்றனர். பொதுவாகப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு சாதிகள் தான் இருந்தன. ஆனால் இவை தவிர மக்கள் செய்த அளவிடமுடியாத பாபங்களுக்குத் தகுந்தபடி ஐந்தாவது சாதி உண்டாயிற்று. அவர்கள் தான் இப்படிப் புலையர்களாக, சண்டாளர்களாகப் பிறவி எடுக்கின்றனர். அவர்களை நீச சாதியென்று சமுதாயத்தில் ஒதுக்கி வைத்தனர். மிக அதிகப்பாவம் செய்தவர்கள் தான் இந்த ஐந்தாவது குலத்தில் பிறக்கின்றனர்.

பிராமணர்கள் நெறி தவறி வாழ்ந்தால், அவர்கள் இந்த நீச ஜாதியில் சென்று பிறப்பார்கள். குரு, தாய், தந்தை ஆகியோரை அலட்சியம் செய்தால் அவன் சண்டாளனாகப் பிறப்பான். கட்டிய மனைவியைக் கை விட்டாலும், எப்பொழுதும் பொய் சொல்கின்றவனும், கன்னியர்களை விலைக்கு விற்பவர்களும், பொய்; சாட்சி சொல்பவர்களும், சுத்தமில்லாதவர் வீட்டில் உணவு உண்ணுபவனும், குதிரை வியாபாரம் செய்கின்ற பிராமணனும், பிற ஜாதிப் பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர்களும், தாசி வீட்டிற்குச் செல்பவர்களும் கீழ் ஜாதியில் பிறக்கின்றார்கள்.

காட்டில் தீ வைப்பவர்களும், தாயாரை அனாதையாக விடுபவர்களும், தாயை விட்டுக் குழந்தையைப் பிரிப்பவர்களும, தீர்த்த யாத்திரைக்கு எனச் சென்று, அந்தந்த இடங்களுக்கு உரிய கிரியைகளைச் செய்யாதவர்களும், நிச்சயம் நீசர்களாகப் பிறக்கின்றார்கள்.

ஒரு பிராமணன் ஆறு விதமான தனது நியம நிஷ்டைகளைக் கைவிட்டாலும், பசுவின் பாலை முதலில் கடவுளுக்கு அபிஷேகம் செய்யாமல் தானே குடித்தாலும், தந்தை தாயின் சேவையைச் செய்யாமல் விட்டாலும் சத்தியமாகச் சண்டாளனாகப் பிறந்து, பிறகு ஏழு ஜன்மங்கள் புழுவாகவும் பிறக்கிறான்.

முதல் மனைவி இருக்கும்போது, அவளைத் தள்ளி வைத்து மற்றொரு விவாகம் செய்து கொள்பவனும், நெடுந் துhரம் யாத்திரை செய்து களைத்து வந்த விருந்தாளியை வேதம் சொல்லச் சொல்லிப் பிறகு அவனுக்கு அன்னமிட்டால் அது ஈனப் பிறவியைத் தான் கொடுக்கும். விரதம் இருப்பவர்களைத் துன்புறுத்துபவர்களும், கேணி, கிணறு ஆகியவற்றை இடிப்பவர்களும், சிவன் கோவில் பூஜையைத் தடை செய்பவர்களும் இழிந்த பிறவி அடைவர்.

குரு பத்னியையோ, சத்துருக்களின் அல்லது நண்பரின் மனைவியரையோ தவறான விதத்தில் அணுகினால் அவன் பதீதனாகப் பிறக்கிறான். இரண்டு தாரமுள்ளவன் ஒருத்தியை மட்டும் உயர்வாகக்கொண்டாடி மற்றவளை அலட்சியப்படுத்தினாலும், மாலை வேளையில் வீடு தேடி வந்த அதிதியை ஆதரிக்காதவர்களும், ஒருவனுக்கு அரசன் அளித்த பூமி தானத்தை அபகரிப்பவர்களும், சந்தி வேளையில் படுத்துத் துhங்குபவர்களும் சண்டாளர்களாகப் பிறக்கிறார்கள்.

தனது வழிபாடுகளைச் செய்து முடித்த சமயத்தில் வருகின்ற அதிதியை மனப்பூர்வமாக வரவேற்காமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே உணவளிப்பவர்கள், கோழியாகப் பிறப்பார்கள். கங்கை நதியைப் பழித்தாலும், ஏகாதசியன்று சாப்பிட்டாலும், பருவ காலங்களிலும், ஹரி தினங்களிலும் உடலுறவு கொண்டாலும், நம் மதம் இல்லாதவனுக்கு வேதத்தைக் கற்பித்தாலும், தாய் தகப்பனாரின் சிரார்த்;தத்தை செய்யாவிட்டாலும், செய்த நற்காரியங்களை ஊரறிய சொல்லிக்கொண்டு திரிந்தாலும், பாகம் பிரிக்கும்போது பேதம் செய்துபங்கு கொடுத்தாலும் அவன் சண்டாளனாகப் பிறக்கிறான்.

பொய்யான மருத்துவர்கள் மகா பாதகர்களாகப் பிறக்கிறார்கள். பில்லி சூன்யம் போன்ற கெட்டக் காரியங்களைச் செய்பவர்கள், சற்குருவை சாதாரண மனிதனாக எண்ணுபவர்கள், சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் இடையில் பேதம் செய்பவர்கள், கங்கை நீரையோ, பாலையோ நாய்த்தோலில் இட்டு உபயோகிப்பவர்களும், விதவையைத் தொடர்பு கொள்பவர்களும், விருந்தாளிகளை வேண்டா வெறுப்புடன் உபசரிப்பவர்களும், திதி நாட்களில் பிண்டம் வைக்காதவர்களும், மாதா, பிதா, குரு, பிராமணர்கள் ஆகியோரைக் கண்டபடி நிந்திப்பவர்களும் சண்டாளர்களாகப் பிறக்கிறார்கள்.

வேதங்களை அதிகமாக சர்ச்சை செய்தால் பிரம்ம ராட்சதர்கள் ஆவார்கள். ஒரு தெய்வத்தை வழிபடுபவன் மற்ற தெய்வங்களை நிந்தனை செய்தால் அபஸ்மாரம் என்ற நோய் ஏற்பட்டுத் தரித்திரன் ஆகிவிடுகிறான். குரு, மாதா, பிதா ஆகியோருக்குப் பணிவிடை செய்யாமல், அவர்களைத் துரத்திவிட்டுத் தானும் தன் மனைவியுமாகத் தனிக் குடித்தனம் செய்பவர்கள் கீழ்க் குலத்தில் பிறந்து எப்போதும் பிணியினால் அவஸ்தைப் படுவார்கள். வேதங்களையும் பிராமணர்களையும் அவமதித்து வாழ்பவன் சிறுநீரகப் பிணியால் அவதிப்படுகிறான்.

மக்களின் குற்றம் குறைகளைப் பகிரங்கப் படுத்தும் பாமரர்கள் இருதய நோயால் துன்புறுவார்கள். கர்ப்பத்தை அழிக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் மலடுகளாகப் பிறப்பார்கள். அப்படிப் புத்திர சந்தானம் ஏற்பட்டாலும் அவை சீக்கிரம் இறந்துவிடும்.

புராணங்கள், தர்மம் பற்றிய பிரசங்கங்கள் நடக்கும்போது, அவற்றைக் கேட்காதவர்களும், பசியோடு இருப்பவர்களை எதிரில் வைத்துக்கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்களும் ஊரின் வெளியே வசிக்கும் நீசர்களாகப் பிறக்கிறார்கள். கீழ்மையான குணமுடையவர்களுடன் பழகுபவர்கள் கழுதை ஜன்மத்தை அடைகிறார்கள். பிரம்மஹத்தி செய்தால் நிச்சயம் அவர்கள் சயரோகத்தைப் பெறுகிறார்கள். மதுபானம் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் கறுப்புப் பற்களுடன் பிறக்கிறார்கள்.

குதிரை, பசு, மாடுகளை வதை செய்தால் பலவித வியாதிகள் வந்து சேரும். தான் செய்த குற்றங்களை உணர்ந்து வருந்தினால் பாபங்கள் தீருகின்றன. நம்பினர்வர்களைக் கை விடுபவர்கள் அடுத்த ஜன்மத்தில் உணவே விஷமாக மாறி சாப்பிட்டதை உடனே வாந்தி எடுப்பார்கள். ஒரு சேவகன் தன் எஜமானனை ஏமாற்றி அவனது செல்வத்தைத் திருடிவிட்டால் அவன் அடுத்த பிறவியில் சிறைவாசம் அனுபவிப்பான். பாம்பு வகைகளைக் கொன்றவன் பாம்பாய்ப் பிறப்பான்.

பெண்களைத் திருடிச் சென்றால் புத்தி இழந்தவர்களாகவும், எப்பொழுதும் மனக் குழப்பம் உள்ளவர்களாகவும் ஆவார்கள். தங்கத்தைத் திருடினவன் மேக ரோகம் பெறுவான் (தோல் வியாதி). புத்தகத்தைத் திருடினால் குருடனாகப் பிறப்பான். பிறர் வஸ்திரங்களைத் திருடினால் அவன் மனைவி எப்பொழுதும் நோயாளியாக இருப்பாள்.

ஒருவன் இறக்கும் தருணத்தில் இருக்கும்போது, அவனது பொருள்களை ஒருவன் திருடினால் அவனுக்கு எப்பொழுதும் சிறைவாசம் தான். பிறருடைய சொத்தையோ அல்லது தானம் கொடுத்த பொருள்களையோ திருடுபவனும், பிறருக்குக் கெடுதல் செய்பவனும் சந்ததி இல்லாமல் தவிப்பார்கள். அன்னத்தைத் திருடினால் குஷ்டரோகம் வரும். தானியங்களைத் திருடினால் துர்நாற்றமுள்ள சிகப்பு தேகத்தை அடைவான். எண்ணெயைக் களவாடினால் சரீரம் நாறும்.

முத்து, மாணிக்கம் முதலிய ரத்தினங்களைத் திருடினால் தாழ்ந்த குலத்தில் பிறக்கிறான். இலை, தழைகள், பழங்கள் போன்றவற்றைத் திருடினால் சொறி சிரங்கு வந்து சிகப்பு தேகத்துடன் விளங்குகிறான். வெங்கலம், இரும்பு, பஞ்சு, உப்பு இவற்றைத் திருடினால் வெண் குஷ்டம் வரும். ஒருவனது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைத் திருடினால், திருடுவோன் எப்போதும் சோகத்தில் மூழ்கியிருப்பான். பிறர் பொருள்களைக் கொள்ளையடித்தால் ஒட்டகமாகப் பிறப்பான்.

பழங்களைத் திருடினால் காட்டு மிருகங்களாகவும், நீரையோ வீட்டுப் பொருள்களையோ திருடினால், காக்கையாகவும் பிறப்பான். இப்படி பாவங்களுக்கேற்றபடியாக பிறவிகள் பெற்று துன்பத்தையும் வேதனைகளையும் அடைந்து திருந்த வேண்டும் அல்லது மேலும் மேலும் பாவங்களையே தொடர்ந்து செய்து திருந்தாமல் வாழ்ந்தால், மேலும் அதிக அளவில் கீழ் கதிக்கும் போக நேரிடும் என்பதையெல்லாம் சத்குரு விளக்கிக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s