குருவைத் தேடி – 28

வேதம் வெளிப்பட்ட கதை

வியாசருக்கு நான்கு சீடர்கள் இருந்தனர். அவர்கள் பைலர், வைசம்பாயனர், ஜைமனி, சுமந்து ஆகியோர். அவர்களிடம் வேத வியாசர், கல்பகோடி வருடங்கள் பயின்றாலும் கூட ஒரு வேதத்தை முழுவதும் உள் வாங்க முடியாது. இப்படி நான் கூறுவது உங்களால் நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் இந்த வேதங்களின் ஆதி அந்தம் பற்றிப் பிரம்மதேவன் பரத்வாஜ முனிவருக்கு சொன்ன வரலாற்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள்” என்று கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் பரத்வாஜர் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் செய்தார். பிரம்மா அவர் முன் தோன்றி என்ன வேண்டுமென வினவ, பரத்வாஜர், ‘நான் பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களை ஆதியோடு அந்தமாய்க் கற்க வேண்டும்! தாங்கள் தான் கற்பிக்க வேண்டும்!” என்று சொன்னார்.

பிரம்மதேவன், ‘எனக்கே வேதங்கள் எவ்வளவென்று தெரியாது. அப்படி இருக்கும்போது, உனக்கு எப்படி நான் கற்றுக் கொடுப்பது? ஆனால் அவற்றின் பரிமாணத்தைக் காட்டுகிறேன்! நீயே தெரிந்து கொள்!” என்று சொல்லி, திவ்ய பார்வையால் காண்பிக்க, அவை கோடி சூர்யப் பிரகாசமுள்ள மூன்று பெரிய மலைகளாகக் காணப்பட்டன. பரத்வாஜர் அவற்றைக் கண்டு பயந்து, திகைத்து, பிரம்மதேவரை வணங்கித் தன்னை மன்னிக்கும்படியும், ஆனாலும் தனக்கு ஆவல் மிக அதிகமிருப்பதால் பிரம்மாவின் விருப்பப்படி சில வேதங்களையாவது கற்பிக்கும்படியும் பக்தியுடன் வேண்டினார்.

பிரம்மா மகிழ்ந்து மூன்று குவியல்களிலிருந்தும் மூன்று பிடியளவு எடுத்து பரத்வாஜரிடம் கொடுத்து, அவற்றைப் பயிற்சி செய்யும்படி உத்தரவிட்டார். பரத்வாஜர் இந்த மூன்று வேதங்களின் மந்திரங்களை மாத்திரம் தனியாகப் பிரித்து அதனை நான்காவது வேதமாகச் செய்தார். அவை ருக், யஜூர், சாமம், அதர்வணம் என்று பிரகாசித்தன.

அப்படிப்பட்ட அந்த பரத்வாஜ முனிவரே வேதங்களை இன்னும் பயின்றுகொண்டு வருகிறார் என்றும், நான்முகனின் நான்கு வார்த்தைகள் நான்கு வேதங்களாக உருவெடுத்தன என்றும் வியாசர் தனது நான்கு சீடர்களிடமும் சொன்னார். அந்த சீடர்கள் வியாசரை வணங்கித் தங்களுக்கு அந்த நான்கு வேதங்களைப் பற்றி அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விவரித்துச் சொன்னால், நாங்களும் எங்களால் ஆனதை அப்பியாசம் செய்கின்றோம் என்று வேண்டினர். வியாசரும் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று விவரித்தார்.

இந்த இடத்தில் சுமார் ஏழு பக்கங்களுக்கு வேத விவரணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நிச்சயமாக நமக்குப் புரியும் விதத்தில் அவை இல்லை. அவையெல்லாம் தகுந்த குரு விளக்கினால் மட்டுமே தகும். அந்தப் பகுதிகளை அப்படியே விட்டுவிட்டு அதற்கு அப்பால் உள்ளதைத் தொடர்கின்றேன்.

வேதங்களைப் பற்றி விஸ்தாரமாகத் தன் சீடர்களுக்குக் கற்பித்த வேத வியாசர் இப்படிப்பட்ட நான்கு வேதங்களையும் பூமியில் பரப்பும்படி அவர்களிடம் சொன்னார். இந்தப் பரதகண்டத்தில் மக்கள் முன்பு வர்ணாச்ரம தர்மங்களை அதாவது குலதர்மத்தைக் கடைப்பிடித்ததால் பாரதம் புண்ணிய பூமியாக விளங்கியது. இந்தக் கலியுகத்தில் பிராமணர்கள் தங்கள் அனுஷ்டானங்களைக் கை விட்டதால் வேதங்களும் மறைந்தன. மேலும் மிலேச்சர்களுக்கு வேதத்தின் அர்த்தங்களைச் சொன்னதால், பிராமணர்கள் கடமை தவறியவர்களாய் ஆகி, அவர்களது புத்தியும் மந்தித்து விட்டது. முற்காலத்தில் வேதங்களின் பலத்தால் பிராமணர்கள் தேவர்களுக்கு ஒப்பான பலமும், மகத்துவமும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களைப் பூசுரர்கள் என்று போற்றி அரசர்களும் அவர்களை வணங்கினர்.

அவர்கள் எந்த தானத்தையும் அங்கீகரிப்பதில்லை. அதன் பொருட்டு மும்மூர்த்திகளும் அவர்களுடைய வசமடைந்தனர். இந்திராதி தேவர்களும் பிராம்மணர்களைப் பார்த்து பயப்பட்டனர். அவர்களது வாக்கில் காமதேனுவும், கற்பக விருட்சமும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. பெரிய மலைகளைப் பொடியாக்கும் சக்தியையும், ஓர் அணுவைப் பெரிய மலையாக்கும் சக்தியையும் அவர்கள் பெற்றிருந்தனர். வேதத்தின் பொருட்டு மஹா விஷ்ணுவே பிராமணர்களைத் தெய்வமாகப் பூஜித்து வந்தார்.

இப்படிப்பட்ட சக்தியும் மகத்துவமும் பிராமணர்களுக்கு இருந்தது. ஆனால் அவர்கள் தங்களின் மேலான வேத மார்க்கத்தை விட்டு அஞ்ஞான மார்க்கத்தில் போகத் தொடங்கினர். எனவே தான் வேத ரகஸ்யங்கள் வெளிப்படை ஆயின. யார் வேதத்தைச் சொல்லிப் பணம் வாங்குகிறார்களோ அவர்கள் தகுதியை இழந்தவர்களாகிறார்கள். அந்நிய ஜாதிக்காரர்களுக்கு வேதம் உரைப்பவர்கள் பிரம்ம ராட்சதர்களாக ஆகிறார்கள் என்று இவ்வளவையும் வெகு விவரமாக அந்த இருவருக்கும் எடுத்துரைத்த குரு நரஸிம்ம ஸரஸ்வதி, பிறகு அவர்களை நோக்கி, நீங்கள் முழுமையாக அறிந்திராத வேதங்களைப் படித்ததாகப் பொய் சொல்லித் திரிவதோடு, வீணாக உங்கள் தற்புகழ்ச்சியைப் பேசிக்கொண்டு ஜய பத்திரங்களைக் காட்டித் திரிவிக்கிரம பாரதியிடமும் எழுதித் தரும்படி கேட்கிறீர்களே! முனிவரின் கோபத்திற்கு ஆளாகாமல் திரும்பிச் செல்லுங்கள்! என்று சொன்னார்.

குருவின் அறிவுரைகளை நன்றாகக் கேட்டும் அதைக் காதில் வாங்காமல், அந்த கர்வம் பிடித்தவர்கள், எம்மோடு வாதம் செய்யுங்கள்! இல்லையேல் ஜய பத்திரம் எழுதிக் கொடுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களை அரசன் தண்டிப்பான் என்று வற்புறுத்தினர்.

குரு ஸரஸ்வதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேளாததால் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஓர் எலியானது பாம்பின் பெட்டியைத் துளைத்துக்கொண்டு தானே அதனிடம் போய் மாட்டிக்கொள்வது போல, விட்டில் பூச்சியானது விளக்கில் வந்து விழுந்து மடிந்துபோவது போலவும், அந்த மூடர்கள் குருவின் மகிமையை அறியாமல் தாமாகவே மரணத்தை நாடலாயினர்.

அந்நிலையில் சற்குரு தொலைவில் சென்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனைப் பார்த்தார். உடனே தன் சீடர்களிடம் ”போய் உடனே அவனை இங்கு அழைத்து வாருங்கள்!” என்றார். அவன் வந்ததும் குரு அவனிடம் என்ன ஜாதி என்று விசாரித்தார். அதற்கு அந்த ஆள், தான் கிராமத்திற்கு வெளிப்புறத்தில் வசிக்கும் புலையன் என்றும், இன்று அவரைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததால் தான் நற்கதி பெற்றதாகவும் சொல்லிக் குருவை வணங்கினான்.

week28குரு நரஹரி அவனைப் பார்த்தார். அப்படிப் பார்த்ததும் அவன் புனிதமானான். குரு ஒரு மாணவனை அழைத்துத் தன் கையிலுள்ள தண்டத்தால் ஏழுகோடுகளைத் தரையில் போடச் சொன்னார். அவன் அப்படிச் செய்ததும், குரு வழிப்போக்கனிடம் ஒரு கோட்டைத் தாண்டி வரும்படி சொன்னார். அவன் அப்படியே செய்தான். உடனே குரு அவனிடம், ‘நீ எந்த குலத்தில் பிறந்தாய்? என்று வினவினார். அதற்கு அவன், தான் வேடர் குலத்தில் பிறந்திருப்பதாயும், தன் பெயர் வனராகா என்றும் சொன்னான். அடுத்த கோட்டைத் தாண்டியதும் தான் கங்கைக்கரையில் பிறந்திருப்பதாகவும், தன் பெயர் கங்கா புத்திரனென்றும் சொன்னான். ஒவ்வொரு கோடாகத் தாண்டித் தன் குலம், கோத்திரம் சொல்லி ஏழாவது கோட்டைத் தாண்டியவுடன், தான் வேதம், சாஸ்திரம், வியாகரணம் முதலியவற்றைப் படித்த அத்யாபகன் என்னும் பிராமணன் என்று சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் குரு அவனிடம், ‘நீ வேத சாஸ்திரங்களை அறிந்தவனென்று சொல்கிறாயே. இதோ! இந்த பிராமணர்களுடன் வாதம் செய்!” என்று உத்திரவிட்டு விபூதியை மந்திரித்து அவன் மீது வீசினார்.

மானஸரோவரில் விழுந்த காகம் அன்னப்பறவையாக மாறியதைப் போல், குருவின் அருள் கிடைத்தவுடன், அந்த வழிப்போக்கன் ஞானம் பெற்றவனாகிவிட்டான். அதனால் குரு சொன்னவுடன் முறையாக வேதங்களைச் சொல்ல ஆரம்பித்தான். அதைக்கண்டு சர்ச்சைக்கு வந்த இருவரும் ஆச்சர்யமும், பயமும் அடைந்தனர். அவர்களுக்குப் பேச முடியாமல் வாயடைத்துப் போனதோடு காதும் செவிடாகிவிட்டது. அதோடு சில நிமிடங்களில் நெஞ்சில் ஒரு வலி ஏற்பட்டுக் கடகடவென்று உடல் நடுங்கிற்று. அவர்களால் நிற்க முடியவில்லை.

உடனே இந்த இரு மூடர்களும் குருவின் சரணங்களில் விழுந்து புரண்டு அழுதனர். தங்களின் பிழை பொறுக்குமாறு கால்களைப் பிடித்துக்கொண்டு புலம்பினர். குருவோ அவர்களை நோக்கி, ‘நீங்கள் அப்பாவிகளான பிராமணர்களை அகம்பாவத்தால் அவமதித்ததாலும், மகா முனிவரான திரிவிக்கிரம பாரதியின் கோபத்திற்கு ஆளானதாலும் இருவரும் பிரம்மராட்;சதர் களாகக் கடவது! என்று சபித்து, உங்களுடைய பாவங்களை நீங்களே அனுபவித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டும்! என்று ஆணையிட்டார்.

அவர்கள் மறுபடியும் குருவின் கால்களில் விழுந்துத் தங்களை மன்னிக்கும்படிக் கதற, ‘பன்னிரண்டு வருடங்கள் பிரம்ம ராட்சதர்களாக இருந்து மிகவும் வருந்தியபிறகு விடுதலை ஏற்படுமென்றும், அவர்களது பாவம் தொலைந்தவுடன், ஒருவன் ‘சுக நாராயணா!” என்று உச்சரித்துக்கொண்டு அவர்களிருக்கும் இடத்திற்கு வருவானென்றும், அவனைக் கண்டதும் அவர்களுக்கு நற்கதி கிடைக்குமென்றும் சொல்லி, அவர்களைக் கங்கை நதிக்குச் சென்று அதில் ஸ்நானம் செய்யும்படி உத்தரவிட்டார்.

ஆனால் அவர்கள் நதிக்கரையை அடைந்ததுமே பயங்கரமான நெஞ்சுவலி வந்து அங்கேயே உயிர் துறந்தனர். அங்கேயே பன்னிரண்டு வருடங்கள் பிரம்ம ராட்சதர்களாயிருந்து பிறகு நற்கதி பெற்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s