குருவைத் தேடி – 6

வெளி உலக விவகாரங்களில் தான் சுகம் இருக்கிறதென்று நினைத்து மனிதன் துன்பத்தையே தேடி அலைகின்றான். மாயையால் உலகம் பொய்யைத் தேடி ஓடுகின்றது. நன்மை தருவதாகவும், இன்பம் தருவதாகவும், முதலில் தெரிபவை கடைசியில் துன்பம் தருவனவாகவே அமைகின்றன.

தயாநிதியாகிய ஸத்குருவிடம் சென்று ஆத்ம வித்தையை அறிய வேண்டும். குருவாகிய ஓடத்தில் ஏறி சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டும். கிணற்றுத் தவளைகள் போல் உலகத்தையே பெரிதாக நினைத்து வாழ்ந்து மக்கள் மாண்டு போகிறார்கள் அஞ்ஞான இருளை அகற்றி ஞானஒளி தரும் இந்த ஸ்ரீ குரு சரித்திரமானது, இதைப் படிப்பவர்களுக்கு சகல நன்மைகளையும் அளிக்க வல்லது.

தமிழ்மொழி புதியதொரு செல்வத்தைப் பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குரு சரித்திரத்தைக் காமதேனு என்றே கருத வேண்டும். பக்தியுடன் சிரத்தையுடன் குருவின்மீது நம்பிக்கை வைத்து இதனைப் பயில்வதால் சிறந்த ஞானம் உண்டாகும். வேண்டியவர்கள் வேண்டிய பயனைப் பெறுவார்கள்.இவ்வாறு தவத்திரு சாந்தானந்த அடிகள் இந்நூலின் உயர்வு பற்றி விவரித்திருக்கின்றார்.

இவ்வளவு உயர்வு மிக்க குரு சரித்திரத்தை முறைப்படி துவங்கும் முன் சில வார்த்தைகள். இனி வர இருக்கின்ற கதை மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குரு சரித்திரத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. வெங்கோஜிராவ் மூலநூலை அப்படியே ஒரு வரி பிசகாமல் தமிழில் மாற்றி எழுதியிருக்கிறார். எனவே இது வெங்கோஜிராவின் வார்த்தைகளும் அல்ல. யார் அந்த மராட்டிய குரு சரித்திரத்தை எழுதினாரோ, அவருடைய சொற்றொடர்கள.; அந்த மூல நூலாசிரியரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அந்த மகா புருஷர் தம் பெயரைக் குறிப்பிடாமல், குருவின் அருளாசிகளைப் பெற்ற தமது வம்சத்தைப் பற்றித்தான் விபரமாக எழுதியிருந்தார். அவர் தன்னை ஸ்ரீ தத்ததாசர் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

இனி குரு சரித்திரம் மூல நூலின் ஆசிரியர் தம் குலத்தைப்பற்றி விளக்குகின்ற வர்ணனையுடன் இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
pray

ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப – ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி – குரு சரித்திரம்

கணேசாய நம:
சரஸ்வத்யை நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ குலதேவதாப்யோ நம:
ஸ்ரீ நரசிம்ம ஸரஸ்வத்யை நம:

 ஜயஜய! லம்போதர! ஏக தந்த, சூர்ப்ப கர்ண! உமது காதுகளை ஆட்டும்போது ஏற்படுகின்ற காற்றினால் எல்லாவித விக்னங்களும் திக்கு திசை தெரியாமல் ஓடி விடுகின்றன. ஆகையால் தான் உன்னை விக்னேஸ்வரன் என்று கூப்பிடுகிறார்கள். இந்த குரு சரித்திரத்தை எந்தவித குறையும் இல்லாமல் எழுதி முடிக்க அருளும்படி தங்களை முதலில் பிரார்த்திக்கின்றேன்.

பிரம்மாவின் பத்தினியாகிய ஸரஸ்வதியை வணங்குகின்றேன். பதினான்கு வித்தைகளுக்கு இருப்பிடமாய் இருப்பவளும், வாகீஸ்வரி, ஹம்சவாஹினி என்றெல்லாம் அழைக்கப்படுபவளும், கலைகள், வேதம், சாஸ்திரம் முதலியவற்றிற்குத் தாயாக இருப்பவளுமாகிய வேத மாதா! இந்த குரு சரித்திரத்தை எழுத எனக்கு நீ அருள் புரியப் பிரார்த்திக்கின்றேன்.

பொம்மலாட்டத்தில் ஒரு சூத்திரதாரி பொம்மைகளை எப்படி ஆட்டி வைக்கிறானோ அதுபோல நம்மையெல்லாம் ஆட்டி வைக்கின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் வணங்குகின்றேன். பராசரர், வால்மீகி, வியாசர் முதலான சிறந்த நுhலாசிரியர்களுக்கு எனது வணக்கங்கள். எனக்கு சாஸ்திரம், கிரந்தம், மகாராட்டிர மொழி போன்ற எதுவும் நன்றாகத் தெரியாது. ஆகையால் தாங்கள் எல்லோரும் எனக்கு அருள் செய்து இந்த சரித்திரத்தை நன்கு எழுத உதவி செய்யும்படிப் பணிவோடு வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.

புண்ணிய புருஷர்களான என் தாய் தந்தையரை தியானிக்கிறேன். ஆபஸ்தம்ப சாகை, கௌண்டில்ய கோத்திரத்தில் ஸாகரே என்ற புகழ் பெற்ற வம்சத்தில் பிறந்த ஸாயம் தேவர் என்பவர் எமது குல முன்னோர். அவருக்கு நாகநாதர் என்று ஒரு புதல்வர் இருந்தார். அவருடைய புத்திரர் குருபக்தியில் மிகச் சிறந்தவரான தேவராயர் என்பவர். அந்த தேவராயரின் மகன் தான் எனது தந்தையான கங்காதரர். அவருக்கு என் நமஸ்காரம்.

ஆச்வலாயன சாகை, காச்யப கோத்திரம், சௌடேஸ்வரர் என்னும் புண்ணியவானின் மகளாகிய சம்பா என்பவள் என் தாய். அவருக்கும் என் நமஸ்காரம். இப்படிப்பட்ட கங்காதரரின் குலத்தில் பிறந்த நான், நிரந்தரமான குரு அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே சாதுக்களுக்கும், வேதப் பயிற்சியைச் செய்கின்றவர்களுக்கும், சந்நியாசிகள், தவயோகிகள், எந்த நேரமும் குருவையே தியானிப்பவர்கள் ஆகியோருக்கும் என் நமஸ்காரத்தை செலுத்துகின்றேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s