காத்திடுக, தரும நெறி!

சோர்வின்றிச் சிரித்த முகத்துடன்
வென்றுவா! என்றான் கண்ணன்.
கண் கலங்கி, மனம் குழம்பித்
தளர்ந்து நின்றான், காண்டீபன்!
krishna_chariot
இவர்களா என் பகைவர்?
இவரிடமா எங்கள் வீரம்?
யாரிவர்கள்? எங்கள் மக்கள்!
யாரைக் கொன்று
எங்கள் வெற்றி? என்றே –

கண் கலங்கி, மனம் குழம்பித்
தளர்ந்து நின்றான், காண்டீபன்!
சோர்வின்றிச் சிரித்த முகத்துடன்
வென்றுவா! என்றான் கண்ணன்!

வீணான மனக் குழப்பம்
கொள்வதேன் மைத்துனனே!
உண்மை என்னவென்று
உணராத பிறவியோ நீ?
என்னையே நிழலாகப் பற்றி நின்றாய்
என்றாலும் இன்று நீ குழம்பி விட்டாய்
தன்னைத்தான் உணர்ந்து விட்டால் – பின்
தளர்வின்றிச் செயல் படுவாயா?

உன்னை நான் உணர்த்தி விட்டால் – விஜயா!
உன் குழப்பம் தீர்ந்திடுமோ?
தன்னிலை தெரிந்த பின்னால் – நீயும்
தருமநெறி காத்திடுவாயோ?

பதறி நின்ற பார்த்திபனும்
பரந்தாமனைப் பணிந்து சொன்னான்
”பாதகம் செய்து விட்டேன் – கண்ணா!
பார் பழிக்கும் செயல் புரிந்தேன்!
என்னை நீ விட்டு விடு!
எங்காயினும் போய் ஒழிவேன் – அன்றி
என் துயரைத் தீர்த்து விடு!
உன் தாளிணை தஞ்சம்!” என்றான்.

கண்ணன் களிநகை புரிந்தான்
கருணையுடன் வாய் மலர்ந்தான்!
மாயையாம் உறவுகளைக் கணமே
உதறிவிடு, குந்தி புத்ரா! நீ
உணர்ந்தவை, யாவையுமே
உண்மையில்லை, புரிந்து கொள்வாய்!

உறவுமில்லை, பகையுமில்லை
பாச பந்தம், உண்மையில்லை
நன்மையில்லை, தீமையில்லை
நல்லதென்றும் கெட்டதென்றும்
நானிலத்தில் எதுவுமில்லை
உயர்வதுவும் தாழ்வதுவும்
புகழ் என்பதும் இகழ் என்பதும்
துள்ளுதலும் துவளுதலும்
ஆடுவதும் அழுகின்றதும் – எல்லாமே
உள்ளத்தின் வேலையன்றி
உள்ளபடி உண்மையில்லை!

மாயையாம் உறவுகளைக் கணமே
உதறிவிடு, குந்தி புத்ரா! நீ
உணர்ந்தவை யாவையுமே
உண்மையில்லை, புரிந்து கொள்வாய்!
மண்ணும் நானே! விண்ணும் நானே!
இயற்கையாயும் செயற்கையாயும்
செயல்படும் எல்லாப் பொருளும் நானே!
உன்னுள் உறைந்திருக்கும் நானே
இங்கு எல்லாம்! என்றான் கண்ணன்!

”இந்த உண்மை புரிந்து விட்டால்
என்னை நீ உணர்ந்து கொள்வாய்!
தெளிந்திடுக தனஞ்சயனே!
காத்திடுக தரும நெறி!”

காண்டீபன் தெளிந்து விட்டான்
கணப் பொழுதில் தேரில் நின்றான்
கண்ணன் காட்டிய வழியினிலே
கடமையை ஆற்றச் சென்றான்!

கண்ணனவன் சொன்ன தெல்லாம்
மண்ணுலகில் வாழ்ந்திருக்கும்
மானிடராம் நமக்கும் கூட
என்றென்றும் பொருத்தமாகும்
மண்ணில் வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
‘வாழும் நெறி” அறிந்து கொள்வோம்
சூழும் வினை நீக்கி நாமும் – கண்ணன்
கழலிணை பற்றி வாழ்வோம்!

Print

Advertisements

2 thoughts on “காத்திடுக, தரும நெறி!

  1. hi amma!
    I just read it . It is wonderful poem amma.
    It shows the meaning, and the way you written and the steps and the method is new way and it tells you that is the “putu kavithay”. It is wonderful job. keep it up.

    Thankou,
    shankar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s