யாம் பெற்ற இன்பம் – 25

இன்பம் என்பது உலகின் ஒவ்வொரு அணுவிலும் இறைவனால் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளது. இறைவனின் படைப்பில் ஒவ்வொரு அணுவும் இன்பமயம் தான். ஏனெனில் அந்த ஒவ்வொரு அணுவின் உள்ளேயும் இருப்பது அவனேயாகும். ஆனால் அப்படிப்பட்ட இன்ப மயமான உலகம் மிக மிகத் துன்ப மயமானதாகவே மிகப்பலருக்குக் காட்சி தருகின்றது. இன்பத்தைத் தேடிச் சென்றால், துன்பமே துணையாக வருவதாகத்தான் பொதுவாக எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்பம் என்பது வெளியில் இல்லை; அது எனக்குள்தான் இருக்கிறது என்கின்றனர் சிலர்.

ஆனால் இன்பம் என்றோ, துன்பம் என்றோ இரண்டுமே இல்லை. இவையெல்லாம் இறைவனின் விளையாட்டு. அந்த இறைவன், தானே உயிராகத் தாயின் கருவில் நுழைந்து, ஓர் உடம்பை எடுத்து, அதற்குள் மனம் என்றும், அறிவு என்றும் சில சங்கதிகளை உருவாக்கி, அவற்றை இயக்கக் கர்மா என்னும் ஒரு பதிவை சூட்சுமமாக வைத்து, அந்தக் கர்மப் பதிவிற்குத் தன்னையே காரணமாக்கிப் பல்வேறு விதங்களில் கோடி, கோடியான படைப்புக்களாகத் தானே மாறி, நாடகமாடிக்கொண்டு இருக்கின்றான்.

இந்த ஓர் உலகத்தில் மட்டுமே எத்தனை கண்டங்கள்? அந்தக் கண்டங்களில் வாழுகின்ற மற்ற ஜீவராசிகளெல்லாம் இறைவனின் நேரடி இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் விடுவோம். மனிதர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு கண்டத்திலும் எத்தனை நாடுகள்? அந்த ஒவ்வொரு நாடுகளிலும் எத்தனை மாநிலங்கள்? ஒரு மாநிலத்தில் எத்தனை ஊர்கள்? அடுத்து இந்த மனித இனத்தில்தான் எத்தனை மொழிகள்? எத்தனை யெத்தனை பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள்! நடையுடை பாவனைகள்! உணவு வேறுபாடுகள்! இந்த அளவிட முடியாத வேறுபாடுகன் எல்லாமே நமக்குத் தெரிந்தவை. நாம் நேரிடையாகப் பார்த்து அறிபவை. இப்போது ஒரு குடும்பத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம். அந்தக் குடும்ப உறவுகளாவது ஒத்தமாதிரி, ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றதா என்று பாருங்கள். எண்ணிப்பார்த்தால் திடுக்கிட்டுப் போவோம். எந்த ஒரு வீட்டிலாவது கருத்து வேறுபாடு, உணர்வு வேறுபாடு இல்லாமல், அச்சடித்தாற்போல் ஒரே மாதிரியாக யாரேனும் இருக்கிறார்களா? உருவத்தால் வேண்டுமானால் ஒன்றுபோல் பலர் இருக்கலாம். குணத்தில், கருத்தில் ஒத்துப் போகின்றவர்கள் யாரையாவது சொல்ல முடியுமா? சண்டை, சச்சரவு இல்லாத ஒரு குடும்பமாவது இருக்கிறதா?

என் மகன் என்னிடம் ஒரு நாள் கேட்டான், ஒரே நேரத்தில் ஒரே விநாடியில் உலகத்தில் எங்கெங்கோ பிறக்கின்ற அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே விதமான கிரக அமைப்புடன் கூடிய ஜாதகம் அமையுமா? என்று. இது மிக்க சிக்கலான ஒரு கேள்விதான்.

சோதிட வல்லுனர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே நேரத்தில் ஒரே விநாடியில் உலகம் பு+ராகவும் பத்தாயிரம் குழந்தைகள் பிறந்தாலும், அவை ஒரே விதமான கிரக அமைப்புடன் பிறக்க முடியாது. ஏனெனில் பிறக்கும் நேரத்தை மட்டும் வைத்து ஒரு ஜாதகம் அமைவதில்லை. பிறக்கும் நாடு, ரேகைகளின் இருப்பு, அந்த இடத்திற்கும், வான் அமைப்பிற்கும் உள்ள தொடர்பு போன்றவற்றையும் சேர்த்துத்தான் அது அமையும் என்பார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அந்தப் படைப்பின் முற்பிறவிக்குரிய கர்ம வினை அவன் வாழ்விற்குரிய அடி நுாலாக அமைக்கப்படுகிறது. இதன் மூலம் என்ன விளங்குகிறது?

படைத்தவன் சூத்திரதாரி. படைக்கப்பட்டவையெல்லாம் தாமாகத் தம் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பச் செயல்படுவதாக எண்ணிக் கொள்வதால் இன்பப்பட்டு அல்லது துன்பப்பட்டு அறியாமையால் அவதிப்படுகின்றன. இதில் சு+ட்சுமம் எங்கே உள்ளது என்றால், இந்த உலகத்திற்கே பொதுவான பரம்பொருள், எல்லாமாகத் தானே உருவெடுத்து, ஒவ்வொரு விதமாகப் பல நுாறு கோடி நாடகங்களை வாழ்க்கையாக நடித்துக் கொண்டிருக்கிறான். அளவிடமுடியாத மிகப் பெரும் ஆற்றலாக அந்த சக்தி தான் இப்படி எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறது. அந்தப் பிரம்மம், தானே ஒரு மனிதனாகத்தன்னை வடிவமைத்துக் கொண்டு சிரிப்பதும், அழுவதும், பயப்படுவதும், என உணர்ச்சிக் களஞ்சியமாக வாழ்கின்றது. பாபியாகவும், நல்லவனாகவும், கெட்டவனாகவும், திருடனாகவும், அல்பனாகவும், அறிவாளியாகவும், முட்டாளாகவும், அரசனாகவும், தீவிரவாதியாகவும், ஞானியாகவும், ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும் என்றெல்லாம் கோலம் காட்டி அந்த ஒன்று தான் உலகையே ஆட்டிப் படைக்கின்றது.

இவற்றையெல்லாம் உணர்ந்தவர்கள், தாங்கள் உணர்ந்தவற்றைப் பல்வேறு விதங்களில் எல்லாம் பாடி வைத்தார்கள். பாடி வைத்தவற்றைப் பொருளுணர்ந்து, மாயை நீங்கிக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

இப்படிக் கூறியவர்கள் குரு என்றழைக்கப்பட்டார்கள். ஆனால் குருவாக இருந்து அறியாமையை நீக்கியவர்கள் கூட, அந்த இறைவனின் திருவிளையாடல்களுக்கு உட்பட்டவர்களாகத்தான் வாழ்ந்தார்கள். எந்த மகானின் வாழ்க்கையிலாவது அவர் துன்பப்படாமல் வாழ்ந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? பாரதத்தின் அவதார புருஷர்களாகப் போற்றப்படும் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், மகான் புத்தர், இயேசுபிரான், முகமது நபி, குரு நானக் என்று யாருடைய வரலாற்றையும் எடுங்கள். துன்பப்படாதவர்கள் யாரையாவது சொல்ல முடியுமா?

எனவே இந்தப் பிறவி வாய்த்தது இறைவனின் திட்டப்படி. ஆனால் இதை அனுபவிக்கின்ற நான் இந்தப் பிறவியல்ல. இந்தப் பிறவிக்குரிய வாழ்க்கை நடந்து முடியும். அதில் இன்பம், துன்பம், நோய், புகழ் எல்லாம் வரும். அவை எனக்குரியவை அல்ல. இந்தப் பிறவிக்குரியவை. இதைப் புரிந்து கொண்டுவிட்டால் போதும். இதைப்புரிந்து கொள்வதுதான் ஞானம். இதைப் புரிந்து கொண்டுவிட்டால், பிறகு வாழ்க்கை நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது. பிறகு எல்லாம் இன்ப மயம்!

இதுதான் எம் குருவின் மூலம் ‘யான் பெற்ற இன்பம்”. ஆத்ம அனுபு+தி பற்றி உபதேசித்தபோது ‘வாழ்ந்து போவீரே!’ என்று எம் குரு அடிக்கடி கூறுவார். அதன் முழுப் பொருளையும் உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், இந்த வாழ்க்கை ஒவ்வொரு கணமும் எனக்குத் தருவதை அப்படியே ஏற்று அந்தக் கணத்தில் வாழ்ந்து, அடுத்த கணமே அதை மறந்து, அடுத்த கணத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து, போய் விட வேண்டும். எது வரினும் சரியே! ஏற்றுக் கொள்வோம்!

இதுவே வாழ்வின் பொருள் புரிந்து வாழ்பவர்கள் வாழ்கின்ற முறை! இதுவே நிம்மதியும் நிறைவுமாகத் தள்ளி நின்று, நடைமுறையை வேடிக்கை பார்க்கின்ற வாழ்க்கை முறை! புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள். குரு வாழ்க!

பிரம்மே உயிராகி -
உயிரே உடலாகி -
உடலே உருவமாகி -
உருவங்களே உறவுகளாகி -
உறவுகளே வாழ்க்கையாகி -
வாழ்க்கையே அனுபவங்களாகி -
அனுபவங்களே ஞானமாகி -
ஞானமே முக்தியுற்று -
உடல் பிரிந்து, மீண்டும்
பிரம்மமாகின்றது.

ஃ–நிறைவுற்றது–ஃ

 

Click here to view the article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s