யாம் பெற்ற இன்பம் – 21

வாழ்க்கை என்பது ஆத்மாவின் விரிவு. ஆத்மா எப்பொழுதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றது. ஆத்மாவின் தன்மை ஒளிர்தல். உடலாகிய உறைதான் ஒருநாள் முடியுமே தவிர, ஆத்மா மறையாது. நித்திய மரணமாகிய நித்திரையில் உடல் செயலிழந்து படுக்கையில் கிடக்கின்றது. புலன்களாகிய கருவிகள் மூச்சாக, இதயத் துடிப்பாக, விரிந்து சுருங்குதலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் ஓய்ந்து களைத்து விட்ட உடலைக் களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி பெற வைக்கின்றது. இப்படி ஆத்மாவின் சக்தியால் தான் உடலாகிய சட்பொருள் இயங்குகின்றது.

நீங்கள் ஒருவரைச் சந்திக்கின்றபோது ஒரு தனி மனிதனை அதாவது அந்த உடலை மட்டும் சந்திக்கவில்லை. அவருள் இருக்கின்ற சக்தித்தொகுப்பைச் சந்திக்கிறீர்க்ள். நமக்குள் இருக்கின்ற ஆத்மாவும், அவருக்குள் இருக்கின்ற ஆத்மாவும் சந்திக்கின்றன. அதாவது இரண்டு சக்திக்களங்கள் சந்திக்கின்றன. வெளி உலகச் செயல்பாடுகளில் ஆத்ம உணர்வற்ற வெறும் சந்திப்பு மட்டுமே நிகழ்கின்றன. அதனால் சந்திப்பின் விளைவுகள் முரண்படுகின்றன.

ஆத்மாவை ஆத்மாவாக நினைத்துச் சந்திப்பது சக்திகள் ஒன்று சேர்கின்ற நிலை. அதனால்தான் தன்னை ஆத்மாவாக உணர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் அதே நிலையில் வாழும் ஒருவரைச் சந்திக்கின்ற நிலையை மட்டும் சத்சங்கம் என்று சொல்கிறோம். அங்குத் தனி மனித மதிப்பீடு இருப்பதில்லை. அங்கு ஒருவரைப் பற்றி ஒருவர் மதிப்பிட்டு எடை போட்டுப் பேசக்கூடாது. வெறும் ஆத்ம உணர்வுதான் அங்கு எழும்பி, ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அதுதான் உண்மையான சத்சங்கம். அப்படிப்பட்ட இடத்தில்தான் ஆத்ம உணர்வுடன் கூடிய தெய்வீக அலை நிரம்பும்.

ஈகோ இல்லாத, ஆத்மாவே நான் என்று உணர்ந்தநிலையில் அங்கு எல்லோரும் சக்தி நிலையில் இருந்து செயல்படுகின்றபோது, அச்செயலில் சக்திக் குவிப்பு ஏற்படுகின்றது. இப்படி நல்ல உள்ளங்கள் மேலும் மேலும் இணைந்து ஒன்றுபட்டால் தான் உலகசமாதானம் ஏற்படும். இப்படிப்பட்ட, தன் சுய நன்மை, சுய மதிப்பு போன்ற போலித்தனங்களற்ற அமைதி அலைகளின் சங்கமம் தான், குழம்பிப்போய், மனம் தடுமாறிச் செயல்படுகின்ற கெட்ட மன அலைகளையும் அமைதியடையச் செய்யும். தன்னை நோக்கி இழுக்கும்.

பத்துப்பேர் ஒழுங்காகச் செய்கின்ற தியானம் பத்து கோடிப்பேரின் மனதில் சாந்தியை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது. குழப்பமற்ற, ஆத்மக்கூடலான சத்சங்கம் ஒன்றில் பலர் ஈடுபடுகின்றபோது, அவர்கள் ஒன்று சேர்ந்து செய்கின்ற ஆத்ம விசாரணையாகிய ஞான வேள்வியால், உலக அளவிலேயே பெரிய மாற்றம் ஏற்படும். உலக அளவில் அவை மாற்றத்தை ஏற்படுத்தும். எங்கும் அமைதி அலைகளைப் பரவச் செய்யும். பரந்துவிரிந்த சமுதாயத்தில் எத்தனை எத்தனையோ சத்சங்கங்கள் எத்தனையோ விதங்களில் இயங்குகின்றன. அவையெல்லாம் உலக சமாதானத்திற்கே முயன்று செயல்படவேண்டும். ஈகோவை வளர்ப்பவையாக அவை இருக்கக்கூடாது.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டபின் ஆன்மீகக் கொடுக்கல், வாங்கலாக இனி நாம் செயல்பட வேண்டும். ஆத்மாவுடன் ஆத்மா பேசுவதாக, செயல்படுவதாகப் புரிந்துகொண்டு, நேர் பார்வையாகச் செயல்படவேண்டும். எண்ணமோ, பேச்சோ எதுவென்றாலும் ஆத்ம உணர்வுக் கலப்புடன் வெளிப்படும்போது அது புரிந்து கொள்ளப்படும். சரியான விதத்தில் விளைவு ஏற்படும். நாம் நினைத்தபடி பதில் கிடைக்கும். அப்படியின்றி எதிர்மாறாக வந்தாலும் அதனை ஏற்கின்ற பக்குவம் நம்மில் ஏற்படும்.

ஆத்மா ஒன்றுபடும்போது அங்கு பேதமில்லை. கருணையுடன் நாம் செயல்படும்போது, நாம் பிறருக்கு எதைக் கொடுக்கிறோமோ, அது பலமடங்காகப் பெருகி நமக்கே திரும்பக் கிடைக்கும். நான் ஆத்மா! எல்லோரும் ஆத்மா! எல்லாமே ஆத்மா! என்ற உணர்வில் தொடர்ந்து இருக்கின்றபோது கருணைபெருகும். பெருகுகின்ற கருணையால் ஆனந்தம் அபரிமிதமாக என்னுள் நிறையும். இந்தக் கருணையைத் தொடர்ந்து வெளிப்படுத்த நாம் செய்ய வேண்டியது, நான் ஆத்மா! என உணர்ந்த நிலையில் விழிப்புணர்வுடன் தொடர்ந்து இருக்க வேண்டியது தான்.

ஐம்புலன்களும் தத்தம் இடத்தில் அடங்கி இருக்க, ஆத்மா கருணைமயமாகத் தானே வெளிப்படுகின்ற நிலை அது. கருணைக்கடல் பெருகிக் காதலினால் உருகி….! என்ற பாடல் வரிகளின் உட்பொருள் இதுதான். இந்தக் கருணையால் அனைவரையும் ஒன்றாகப் பார்க்க முடியும்.

நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிந்தும் அதனால் பாதிப்படையாமல், தன் அமைதிகெடாமல் இருப்பதும், தனக்கு வருகின்ற துன்பத்தையும் கருணையினால் ஏற்று சகித்துக் கொள்வதும் ஆன்மீக உயர்வு நிலை. அன்பும் கருணையும்வேறு எங்கோ ஒரு தெய்வத்திடம் இருப்பதாகப் பலர் எண்ணியிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இவை நமக்குள்ளேயே தான் உள்ளன.

எனவே, முழுக்கருணை நிலையாகவே நம்மை நாம் வைத்திருப்போம். அன்பு, காதல், பாசம், எல்லாமே கருணையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளே. இவற்றில் கருணைதான் அதி உயர்ந்தது. உலகத்துடன் நாம் உறவாடும்போது இனி கருணையே வெளிப்படட்டும். அன்பு, பாசம், காதல் என்பவையெல்லாம் இனி வேண்டாம். நம் செயல்களில் கருணை முழுமையாகக் கலந்தால், எல்லாமே வெற்றிதான்! கருணை கலப்படமற்றது. சுயநலமற்றது. உலகம் முழுவதற்கும் தரக் கூடியது!

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s