கங்கா ஒரு காவியம்

brahminவணக்கம். வாசகர்களாகிய நீங்கள் படித்திருக்கும் எத்தனையோ கதைகள் போன்றதல்ல இந்த நெடுங்கதை. நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற எத்தனை எத்தனையோ குடும்பங்களில் ஏதோ ஒரு குடும்பத்தின் நெடிய வரலாறு இது. கற்பனையின் சுவாரசியம் மிகுந்த திடீர்த்திருப்பங்கள் இதில் எழுதப்படவில்லை.

பூமியில் விழுந்த ஒருவிதை எப்படி மண்ணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டு முளைத்துச் செடியாகி வளர்ந்து மரமாகி நிலைத்து நிற்கப் போராடுகின்றதோ, இறுதியில் இயற்கையின் நியதிப்படி ஒரு நான் வெட்டுண்டு கீழே சாய்கின்றதோ, அப்படி வாழ்ந்த ஒரு பெண்மணியின் கதை இது.

சாதாரண கிராமத்துப் பெண்ணான கங்கா எதிர்கொண்ட வாழ்க்கைப் பிரச்னைகளே இங்குக் காவியமாகக் கனிந்திருக்கின்றது. ஒரு பெண், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக மற்றும் பல உறவுகளாக, ஒரு குடும்பத்திற்கு எப்படியெல்லாம் ஒளிவிளக்காகத் திகழ்ந்து, ஆணுக்குப் பக்கபலமாக, வாழ்வில் சுவை சேர்ப்பவளாகச் செயல்பட முடியும் என்பதை நினைத்துப் பார்க்க வைக்கும் வாழ்க்கை வரலாறு இது.

பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர். அவர்கள் தம் பெருமையை உணர வேண்டும். மதிப்பு மிக்கத் தமது நிலையைக் கீழ் உணர்வு சிந்தனைகளால் ஒரு பெண் சீரழிக்கக்கூடாது. நமது கலாச்சாரத்தில் பெண்ணின் இடம் உயர்ந்தது. இதை ஆண்கள் உணர வேண்டும். அறிவிற் சிறந்த ஆண், உள்ளுணர்வில் சிறந்த பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, அவளது கருத்தையும் கேட்டு, அவளைத் தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கௌரவத்துடன் நடத்துகின்ற குடும்பம், நிச்சயமாக ஒரு பல்கலைக் கழகமாகத் திகழும்.

முரண்பட்ட மனப்பான்மை, பெண்ணை மதிக்காத தன்மை, தன் போக்கிலேயே செயல்படுதல் போன்றவை, அக்குடும்பத்திற்கு அழிவைத் தான் கொண்டு வரும். அதே சமயம் அன்பே உருவான பெண், பொறுமை, தியாகம், சகிப்புத் தன்மை, அனுசரித்து நடத்தல், சிறந்த அறிவுத் திறன், பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் துணிவு போன்ற நற்குணங்களால் தன்னை நிரப்பிக்கொண்டால் தான், அவள் வாழ்வு ஒரு காவியமாகும். இனி, நீங்களே இக்கதையைப் படித்து அனுபவிக்கத் துவங்குங்கள்.

நட்புடன்,
விஜயா


கங்கா ஒரு காவியம் -1
கங்கா ஒரு காவியம் -2
கங்கா ஒரு காவியம் -3
கங்கா ஒரு காவியம் -4
கங்கா ஒரு காவியம் -5
கங்கா ஒரு காவியம் – 6
கங்கா ஒரு காவியம் – 7
கங்கா ஒரு காவியம் – 8
கங்கா ஒரு காவியம் – 9
கங்கா ஒரு காவியம் – 10
கங்கா ஒரு காவியம் – 11
கங்கா ஒரு காவியம் – 12
கங்கா ஒரு காவியம் – 13
கங்கா ஒரு காவியம் – 14
கங்கா ஒரு காவியம் – 15
கங்கா ஒரு காவியம் – 16
கங்கா ஒரு காவியம் – 17

 

Advertisements